வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதுகுறித்த புது ஏற்பாடுகள் விரைவில் துவங்கலாம்.

அறிக்கையின் அடிப்படையில், வங்கி ஊழியர்கள் தினசரி காலை 9:45 முதல் மாலை 5:30 மணி வரை 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கும். இந்த முன் மொழிவுக்கு ஐபிஏ ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏராளமான வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங், ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் வசதிகளை பயன்படுத்தி வருவதாக வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.