2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வெறும் சம்பிரதாயமாகத்தான் இருக்கும். ஏனெனில் இந்த இரு அணிகளின் சவால் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றி பெறுவது இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியம். இங்கிலாந்து முதல் 8 இடங்களுக்குள் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.

எனவே இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் இதுவரை 91 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 56 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 32 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 5 போட்டிகளிலும், இங்கிலாந்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது.

கொல்கத்தா மைதானத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் 2 மணிக்கு மோதுகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் ஏற்றது. எனவே, சிறப்பாக செயல்படும் அணி வெற்றி பெறும். இந்த மைதானத்தில் இதுவரை 38 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 22 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 242 ரன்கள் எடுக்கலாம். ஈடன் கார்டன் மைதானம் தூய்மையான சூழலைக் கொண்டிருக்கும். அதனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஈரப்பதம் 46 சதவீதம் வரை இருக்கும். வெப்பநிலை 21 முதல் 32 டிகிரி வரை இருக்கும்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்கதேச அணிகள் மகாராஷ்டிராவில் காலை 10 :30 மணிக்கு மோதுகிறது..

இரு அணிகளின் XI ஆடும் சாத்தியம்

இங்கிலாந்து :

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷபிக், ஃபகார் ஜமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவூப்.