தமிழ் சினிமாவில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வட சென்னை, எந்திரன் 2.0, டான் உட்பட பல்வேறு படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இப்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன்-2 படம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமானது புது அப்டேட் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பாக இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.