லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் இப்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியாகிய தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தில் விஜய்-திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில், அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார். இது தொடர்பான தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. காஷ்மீரை தொடர்ந்து அடுத்தகட்ட சூட்டிங் சென்னையில் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் விஜய்-திரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க உள்ளார்.