ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை அதிகரித்து பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாய் செலவில் சிலை எதற்கு? என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அந்த தொகையை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால், திரைத் துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.