திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அதிரடி திட்டங்களை செயல்படுத்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ இறந்ததால் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கில் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு திமுக கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தயாராகுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர் 2021-இல் தமிழகத்திற்கு விடியல் ஏற்பட்டது போல் 2024-ல் இந்தியாவிற்கே விடியல் ஏற்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போது இருந்தே கட்சியினர் தொகுதிகளில் தீவிர கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்காக யார் உண்மையாக உழைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். மேலும் அவர்களின் உழைப்பிற்கு எப்போதும் கட்சியும் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். இது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க தற்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.