ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருவது விரைவில் சரி செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு, அவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய வருமானம், அதில் காண்பிக்கப்படும் விளம்பரத்தை நம்பியே இருந்துவிடக் கூடாது என கூறியிருக்கிறார்.

பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் செலுத்துதல், தேவையில்லாத செலவுகளை குறைப்பதற்கு பணியாளர்கள் பணி நீக்கம் என்று அதிரடியாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் பெரிதாக மற்றும் அடிக்கடி விளம்பரங்கள் வருவது ஆகிய பிரச்சினைகளை தீர்க்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.