ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல் இந்திரா உள்ளிட்ட இபிஎஸ் தரப்பினர் இன்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். எனினும் இபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம், 2014 முதல் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறேன். பாஜக இருக்கும் பக்கமே நான் இருப்பேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.