ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கருப்பன் யானையை பிடிப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து அரிசி ராஜா, கபில்தேவ் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

நேற்று காலை மேலும் கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, கருப்பன் யானையை பிடிக்க உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மருத்துவ குழுவினர் வந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் கருப்பன் யானை பிடிக்கப்படும் என கூறியுள்ளனர் .