யானை வென்றால் என்ன?   கழுதை வென்றால் என்ன?   

 புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.   அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு  பதிலளித்த அவர், 

பொதுவாக நாங்கள் மற்றவர்களின் தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. மற்றவர்கள் நம் தேர்தல் குறித்து பேச மாட்டார்கள் என்று நம்புகிறேன் அமெரிக்காவில் இரண்டு சின்னங்களில் வெவ்வேறு நபர்கள் போட்டியிடுகிறார்கள் அதில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களோடு நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்   நமது தேர்தல் உண்மையானது.   உலகில் ஜனநாயக நடைமுறையை ஆதரிக்கும் ஒரே நாடு இந்தியா.   எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளின் சின்னம் யானையும் கழுதையும்.   குடியரசுக் கட்சி யானை சின்னத்தையும், ஜனநாயகக் கட்சி கழுதையையும் பயன்படுத்துகின்றன.   இவை அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.