அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.