திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உங்களுக்கான வகுப்புகள் காலை முதல் மாலை வரைக்கும்….  நாங்க வர வரைக்கும் நடந்திருக்கு. வாக்குச்சாவடி பொறுப்பாளரின் கடமைகளும்,  பணிகளும் என்ற தலைப்பில்  நம்முடைய கழகத்தின் மூத்த வழக்கறிஞர்,  மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ அவர்கள் பேசியிருக்கிறார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நம்முடைய அருமை செயல்வீரர் நந்தகுமார் அவர்கள் இங்கே உங்களுக்கு விளக்கி இருக்கிறார். சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்தக்கூடிய முறை பற்றி நம்முடைய அருமை தம்பி எஸ்.கே.பி கருணா அவர்கள் உங்களுக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

கழகத்தினுடைய வரலாறு, அடிப்படை கொள்கைகள், திராவிட இயக்கத்தினுடைய கோட்பாடுகள், நவீன தமிழ்நாட்டை நாம் ஏற்பாடு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், அதற்கான முயற்சிகள் என்ன ?  திராவிடல் மாடல் ஆட்சி குறித்து அடிப்படை தகவல்கள் எல்லாம் நம்முடைய பேரன்பிற்குரிய திண்டுக்கல் லியோனி அவர்களும்,  அதேபோல மருத்துவர் ஏகன் அவர்களும் உங்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டலும்,  தேர்தல் பயிற்சிகளும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மனசுல வச்சி நீங்க செயல்படனும். இதெல்லாம் இந்த தேர்தலுக்காக மட்டும் இல்ல…  எல்லா தேர்தலுக்கும் பயன்படுத்த வேண்டிய பணிகள் தான்.. திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பத்தூர் ,

ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு   ஆகிய மாவட்டங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் இங்கே  கூடி இருக்கிறீர்கள். உங்களை எல்லாம் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து அழைத்து வந்திருக்கிறார். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உங்களை எல்லாம் இங்கே அழைத்து வருவதற்கு உதவி செய்து இருக்கிறார்கள், துணை நின்று இருக்கிறார்கள். அமைச்சர் ஏவா வேலு அவர்கள்,  அமைச்சர் காந்தி, அமைச்சர் மஸ்தான்,

தா.உதயசூரியன்,  நந்தகுமார், புகழேந்தி,  தடங்கம் சுப்பிரமணி, Y.பிரகாஷ், தேவராஜ்,  வசந்தன் கார்த்திகேயன், தாரணி வேந்தன்,  மதியழகன், பழனியப்பன் இவர்களுக்கெல்லாம் முதல்ல என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும்,  வாழ்த்துக்களையும் தலைமை கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.