
தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார். ஏனெனில் குழந்தைகளுக்கு கல்வி தான் முக்கியம் என்று உயிரிழந்த கருப்பசாமி அடிக்கடி தெரிவித்துள்ளார்.
அதனால் தான் அந்த சோகத்திலும் அவரது மகன் தேர்வு எழுத சென்றார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடித்துவிட்டு வந்த அவர் தனது தந்தைக்கான இறுதிச் சடங்குகளை செய்தார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.