சொத்து வரி உயர்வு குறித்து கே.என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். திருப்பூர் மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக அதிமுக போராட்டத்தை நடத்தியது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை வருடத்திற்கு ஒருமுறை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த பழனிச்சாமி, திடீரென்று மக்கள் மீது அக்கறை கொண்டவர் போல வேடம் போடுகிறார்.

மத்திய அரசால் விதிக்கப்பட்ட 15 வது நிதி ஆணையத்தில், மாநிலத்தின் உள்நாட்டு அமைப்புகள் வருடந்தோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என்று விதித்தது. அதேபோன்று மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் 2.0 ஆகியவற்றிற்கும் இதே நிபந்தனைகள் தான். ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைபிடிக்காவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 முதல் 26 வரை மத்திய அரசு கொடுக்க வேண்டிய மானியத்தை நிறுத்தி விடும். அதோடு தூய்மை இந்தியா திட்டத்திற்கும் நிதி வழங்கப்படாது.

இப்படி கடுமையான விதிகளை விதித்த போது, அவர்களோடு நட்பாக இருந்தது எடப்பாடி தான். ஆனால் தற்போது சொத்து வரி உயர்வுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்று கூறுவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல உள்ளது. இவ்வாறு சொத்து வரியை உயர்த்தியதன் காரணமாக, தமிழ்நாடு மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பாதிக்காத வகையில் மிகக் குறைந்த அளவு சொத்து வரையினை உயர்த்த உத்தரவிட்டார். இந்த வரியை பிற மாநிலங்களிடம் ஒப்பிடும்போது, மிகக் குறைவான அளவை ஆகும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.