திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்,பேரிடர் ஏற்படுகிற நேரத்தில் அரசுக்கு உதவியாக அது எந்த கட்சியாக இருந்தாலும்…. எதிர்கட்சியாக இருந்தாலும்…..  அதிமுகவாக இருந்தாலும் துணை நிற்க வேண்டும். அரசு கூட இருந்து மக்கள் பணியாற்றி இருக்கணும்.

அப்படி யாராவது வந்தாங்களான்ன்னு கேட்டீங்களான்னா  இல்ல. கொரோனா காலகட்டத்திலேயே ஆட்சியில் இருந்தபோதே அவரால். அப்பவே எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் முன் நின்று ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்து செயலாற்ற்றியது.  அதை நீங்க எல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. இந்த மாதிரி நேரத்துலயும் மலிவான அரசியல் செய்ய முன்னாடி வந்துடுறாரு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

சில நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு விழாவில் பேசுற பழனிச்சாமி அவர்கள்,  சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலனாக அதிமுக தான் அப்படின்னு பேசியிருக்கிறார். சிறுபான்மை மக்கள் மீது அவருக்கு திடீர் பாசம் பொங்குது.  நான் கேட்கிறேன்…. குடியுரிமை திருத்த சட்டம்,  காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து, முத்தலாக் எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிச்சாமி என்று தெரியும்.

கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பை கட்டு கட்டினார். இப்போ பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கிட்டு இருக்காரு. பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா ? இல்லையே… இவர் நாடகத்தை  மக்கள் பார்த்து யாரும் ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணி தான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய அளவிலே ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்கணும்.  நீங்கள் ஆதரவு தரணும் என பேசினார்.