தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று (மார்ச் 13). முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது போன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என துர்கா ஸ்டாலின் கூறிவிட்டாராம்.

இந்த வருடம் அவர் தன்னுடைய பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட விரும்பவில்லை என கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகிறார்கள். ஏனெனில் கடந்த பிப்ரவரி மாதம் துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி உடல் நல குறைவினால் உயிரிழந்தார். மேலும் அந்த துயரத்தில் இருந்து துர்கா ஸ்டாலின் இன்னும் முழுமையாக மீளாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.