விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு திருமா படிப்பகம் என்ற நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிறகு தொல். திருமாவளவன் தொண்டர்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் எம்பி பதவிக்கு நல்ல மரியாதை இருந்தது. எம்பி கடிதம் கொடுத்தால் அதற்கு மரியாதை இருக்கும். முன்பெல்லாம் எம்பி, எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டால் கலெக்டர் வேலை தருவார்கள்.

அதோடு எம்பி கடிதம் கொடுத்தால் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு, வீட்டு சமையல் கேஸ் இணைப்பு போன்றவைகள் கிடைக்கும். எம்பி சிபாரிசு செய்தால் வேலை கிடைக்கும். இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது. ஆனால் தற்போது எம்பி பதவிக்கு மரியாதையே கிடையாது. எம்பின்னு சொன்னா என்ன தம்பி என்று சொல்கிறார்கள் அவ்வளவு தான் மரியாதை. எனவே அனைவரும் நன்றாக படித்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் சேர வேண்டும் என்று கூறினார்.