நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான செய்திகள் பரவிய நிலையில் அது பெரும் சர்ச்சையாக மாறியது.

பீகாரில் இருந்து ஒரு குழு தமிழகத்திற்கு வந்த ஆய்வு செய்ததில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் போலியான வீடியோக்கள் மூலம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை துண்டுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வெளிப்படையாக கூறினார். இதைத்தொடர்ந்து சீமான் மீது தமிழக போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதற்காகத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார்.