ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய பாரா தடகள வீராங்கனை ஷர்மிளா குண்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் பாரா தடகளப் போட்டிகளின் வரலாற்றிலேயே, இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்லும் முதல் வீரர் என்ற பெருமையை ஷர்மிளா இதன் மூலம் தட்டிப் சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், காமன்வெல்த் பாரா தடகளப் பிரிவில் இந்தியாவிற்கான 20 ஆண்டுகாலப் பதக்கக் காத்திருப்புக்கும் இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரா தடகளத்தில் இந்தியாவிற்கு முதன்முதலாக தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால், விளையாட்டு உலகமும் இந்திய மக்களும் ஷர்மிளாவிற்குத் தங்களது வாழ்த்துகளை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.
