
திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் வந்ததிலும் சரி இதெல்லாம் இவ்வளவு தூரம் நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு நான் சொன்னேன்…. மருத்துவ அணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூன்றும் சேர்ந்து நடத்துகின்ற இயக்கம் நீட்… இந்த நீட் இயக்கத்துல நம்முடைய இலக்கு 5 லட்சம் என நாம் முன்பே சொல்லி இருக்கிறேன். இவையெல்லாம் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் கார்டுகள் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதெல்லாம் ஒன்றிய செயலாளரிடம் பிரித்துக் கொடுக்கப்படும். ஒன்றிய செயலாளர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் அந்த கார்ட அடிக்கச் சொல்லி இருக்கோம்…. அந்த கார்டுகளில் கையெழுத்து வாங்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் ஆன்லைனிலும் வாங்கணும். அந்த கார்டுல எப்படி முக்கியமா வாங்க வேண்டுமென்றால், உங்க பகுதியில இருக்கின்ற கல்லூரிகள் – பள்ளி மாணவர்களிடம் வாங்க வேண்டும்…. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கின்ற மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து வாங்கும் போது, ஸ்கூல் எதிரில் போய் நின்னுகிட்டு… அவங்க போகும் போது…. அவங்க முடிச்சுட்டு வரும் போது அவங்க கிட்ட வாங்குங்க….. சும்மா உக்காந்துகிட்டு பேசிகிட்டு அங்க சொன்ன…. இங்க சொன்னாங்கறது எல்லாம் சரியா இருக்காது.
விழுப்புரத்தில் இருக்கிற அரசு கலைக் கல்லூரியாக இருந்தாலும், சட்டக்கல்லூரியாக இருந்தாலும், பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், மகளிர் கல்லூரியாக இருந்தாலும், தனியார் கல்லூரிகளாக இருந்தாலும், எல்லா கல்லூரிகளுக்கும் சென்று அந்த மாணவர்களிடையே இந்த மாதிரி முகாம் மாதிரி நடத்தணும்….. காலையில போகும் போது அங்க போய்,
ஒரு டேபிள், சேர் போட்டு வெளியே உட்கார்ந்துக்கணும்…. உள்ள போக கூடாது, கிளாசுக்கு எல்லாம் உள்ள போக கூடாது… வெயில்ல உட்கார்ந்து அவங்க கிட்ட கார்டை கொடுத்து கையெழுத்து வாங்குங்க. இல்லன்னா அவங்க போன்ல…. ஆன்லைன்ல போட சொல்லுங்க…. இந்த வேலையை செய்யணும் அதுதான் மிக மிக முக்கியம். அப்பதான் நாம செய்ய முடியும் என தெரிவித்தார்