
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் ஒரு லாயர். பக்கத்திலும் ஒரு லாயர் உட்கார்ந்து இருக்காரு. முப்பது வருஷமா இருந்த கோயில் அது… அரசு நிலத்தில் 20 வருஷத்துக்கு மேல இருந்தால் அவருக்கு ஆட்டோமேட்டிக்கா அவரோட சொத்தாக மாறிவிடுகிறது. அப்படி இருக்கும் போது போலீஸ் போய் எப்படி இடிக்கிறது ? நீங்க ஏன் பாதுகாப்பு கொடுக்குறீங்க…
ஆகவே தமிழ்நாடு போலீஸ், பிஜேபி விரோத, ஹிந்து விரோத நடவடிக்கையை நிறுத்தனும். நிறுத்தல, நிறுத்த வைப்போம்.. மிகப்பெரிய போராட்டம் திருச்சி காவல்துறைக்கு எதிராக… அவர்களுடைய பிஜேபிக்கு விரோதமான, அரசியல் ரீதியான பாரபட்சத்தை எதிர்த்து போராட வேண்டியது இருக்கும். நாங்க கோர்ட்டுக்கு போறது, உங்க மேல கேஸ் போடுவதெல்லாம் வேண்டாம் எங்களுக்கு…
வீதி வீதியா தமிழ்நாடு காவல்துறை திமுகவின் ஏவல்துறையாகி இருக்கிறது. அவங்க தேசவிரோதிகள், தீய சக்திகள் திருமாவளவன், சீமான் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கல. ராஜா பொய் சொல்லணும்னு அவசியம் இல்லை. அவங்க அன்னைக்கு மனித சங்கிலி நடத்தினபோது, திரும்பி நீங்களா ? நாயகன் படத்தில் கமலஹாசன் கொலை பண்ணும் போது…. எல்லாம் திரும்பி நிப்பாங்க… அந்த மாதிரி நின்னது தான் காவல்துறை …. என்ன தைரியம் இருக்கு ? உங்ககிட்ட என்ன முதுகெலும்பு இருக்கு ? ஆகவே நீங்கள் அரசியல் ரீதியாக, தேச விரோதிகளுக்கு ஆதரவா செயல்படுறீங்க என விமர்சனம் செய்தார்.