
நீட் தேர்வுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை கூட திமுக அரசு கர்நாடகா பிரச்சனைக்கு அழுத்தம் காட்ட மாட்டேங்கிறதை நீங்க எப்படி பாக்குறீங்க என்ற கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ்,
இல்ல. இது ஒரு ஏதோ திமுக பிரச்சினை கிடையாது. இது தமிழ்நாட்டோட பிரச்சனை. கடந்த ஒரு பத்து நாளாக நானும் சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்சம் வேகம் காட்டணும் என சொல்லி இருக்கேன். ஏன்னா காவிரி பிரச்சனையில் சில பேர் டெல்டாவில் விவசாயம் மட்டும் பேசிட்டு இருக்காங்க, அது பிரச்சனை கிடையாது.
காவிரி ஆறு பார்த்தீர்க்கன்னா… தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 22 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும் இது. சென்னை உட்பட 22 மாவட்டங்கள் உள்ள குடிநீர் பிரச்சினை. 40 லட்சம் விவசாயிகள் நம்பி இருக்கின்றார்கள். காவேரி நீரை குடிப்பதற்காக கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் காவிரியை நம்பி இருக்காங்க. இவ்வளோ பெரிய பிரச்சனை இது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு மக்கள் தொகை காவிரியை நம்பி இருக்காங்க. இது எவ்வளவு பெரிய பிரச்சனை. இதுல அரசியலை பார்க்கக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவும் இப்ப பாத்தீங்கன்னா…. தீவிரமா அவுங்களுக்குள்ள பயங்கரமா அரசியல் பண்ணிட்டு இருக்காங்க.இந்த தேர்தல் முடிந்த பிறகு கொஞ்சம் அடங்கும் என நினைக்கிறேன். ஆனால் அடுத்த ஆண்டும் இதே பிரச்சனை வரும். அதனால இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு வரணும் என தெரிவித்தார்.