
ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம உதவியாளர் கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் கிராம உதவியாளர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பின்னர் அந்த நபரை கிராம உதவியாளர் ராசையாவிடம் பணத்தை கொடுக்கும்படி அனுப்பி வைத்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சம்பவ இடத்தில் மறைந்திருந்தனர். அங்கு கிராம உதவியாளர் ராசையா அந்த நபரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.