தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குதவது மட்டும்ல்லாமல், கடற் கொள்ளையர்கள் தக்குதும் தொடர்ச்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க படித்திருக்கிறீர்கள்… நீங்களும் கடல் கொள்ளையர்கள் எல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த கதையெல்லாம் நம்ம அம்மா கதை மாதிரி… அது கூட நன்றாக இருக்கும் லாஜிக்கா ? ஒரு வலிமை மிக்க கடற்கரை ராணுவம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா உலகத்தில் வலிமைமிக்க ராணுவப்படை. இலங்கை கடற்படை நிக்குது…   நியாயமாக பார்த்தால் நம்ம கடற்கரை ராணுவம் நம் நாட்டு குடிகளை இது எல்லை, இதோடு  மீன்பிடித்து திரும்புங்கள் என்று சொல்லணும்.  அவன் தாக்குதலுக்கு வந்தா ? கைது பண்ண வந்தா ? தடுத்து காப்பாற்றி,  நம் பிள்ளைகளை மீட்டு காப்பாற்றி வர வேண்டும். படகை பறிக்காத.. அடிக்காத… சூடாத என சொல்லும். இது எதையுமே இது  செய்யவில்லை..

இப்போ இலங்கை நாட்டு கடற்படை ராணுவமும்,  இந்திய நாட்டு கடற்கரை ராணுவமும் நிற்கும் போது கடற்கொள்ளையர்கள் எங்கிருந்து வருகிறார்கள் ? அப்போ இந்த கடற்படை ராணுவம் எல்லாம் தூங்குகிறதா? கடற்கொள்ளையர்கள் யார் என்று சொல்லுங்கள் ? சிங்கலனா ? இல்லை தமிழனா ? இல்ல வேறு ஏதாவது இந்தோனேசியா….  வேறு பகுதியில் இருந்து உள்ள வருகிறானா ? யார் அது ? இந்த கதை எல்லாம் இன்னும் நம்மை  நம்பிட்டு இருக்க சொல்லுகிறார்கள்…  இதே தான் சொன்னான்…

சோமாலியா பட்டினி,  பசியில் என்ன பண்ணுவது என்று தெரியாமல்,  கப்பலில் ஏதாவது உணவுப் பொருள் வருமா ? என்று தடுத்து பறிக்க வந்தவனை இதே தான் சொன்னார்கள் கடல் கொள்ளையன் என்று….  வயிறு நிறைய பசியோடு இருப்பவனுக்கும் தோட்டாவை பரிசாக வயிற்றுக்குள் கொடுத்தார்கள். அந்த கதை தான் இது. கடற்கொள்ளையர்கள் கதை எல்லாம் இன்னும் நாம் நம்புவதா, என்ன ?   இந்த மக்களை அறிவில்லாதவர்கள் என  நினைத்துக் கொண்டு கதையை கட்டி விடுவது தான் என தெரிவித்தார்.