செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பல ஆண்டுகள் நிலுவையிலே இருந்த திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுங்கு நடத்தப்பட்டது. அதே போல திருத்தேர் திரு பவனி, அதேபோல் திருவிழாக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான்….. திராவிடம் மாடல் ஆட்சியில் தான் இப்படிப்பட்ட திருப்பணிகள் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆய்வு கூட்டத்தை பொறுத்த அளவில் நீதிமன்றத்தின் உடைய உத்தரவுக்கு இணங்க… இந்து சமய அறநிலைத் துறையின் சார்பில் மூன்று நபர்களையும், அதேபோல் தொல்லியல் துறையின் சார்பில் மூன்று நபர்களையும் ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.  வெகு விரைவில் அந்த குழு சிதம்பரம் நடராஜர் திரு கோவிலில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான விளம்பர பதாகைகளும் அனுமதி இன்றி வைக்கப்பட்டால்,  அகற்றுவது அரசினுடைய கடமை. அந்த வகையில் நீங்கள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகையை அகற்றுவது மாநகராட்சியின் உடைய கடமையா ? இல்லையா ? என கேள்வி எழுப்பினார்.