செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தினுடைய பல பகுதிகளில் இது போல நடக்கின்றது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் பல இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு  நடைபெறுகிறது என்ற புகார் என்னிடத்தில் வருகிறது.  மதில் சுவர் ஏறி திருட்டுகள் நடப்படுவதாக சொல்கிறார்கள்.

அதேபோல சிவகாசி பகுதியில் அடிக்கடி பட்டாசு வெடி விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. ஒட்டு மொத்தத்தில் ஒரு அரசு வேலியே பயிரை மேகிறதுக்கிணங்க…  ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதனுடைய பாதுகாப்பில்…. ஆளுங்கட்சியின்  நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மணல் திருடுகிறார்கள், கனிம வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள்,  பிற நாடுகளுக்கு கடத்துகிறார்கள்.  போலி மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள்.

டாஸ்மார்க் ஏன் மூட மறுக்கின்றார்கள் என்று சொன்னால் ? ஒரு பக்கம் அதிலிருந்து வரும் வருமானம்.  இன்னொரு பக்கம் அவர்களுடைய கட்சியில் இருந்து கொண்டு போலியான மதுபான ஆளை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் சென்று இருக்கின்றார்கள்.  எனவே இந்த ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால் ?  இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திமுக வேரோடும், மண்ணோடு சாய்க்கக்கூடிய அளவுக்கு… அவர்களுக்கு படம் புகட்டும் வகையில் ஆயத்தமாக வேண்டும் என தெரிவித்தார்.