திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,  ஹிண்டர்பெர்க்  என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள்,  ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக  கேட்டாங்க.

ஆனால் இதுவரைக்கும் திரு மோடி அவர்களோ, பாஜகவோ அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. சமீபத்தில் லண்டனில் இருந்து வருகின்ற பைனான்சியல் டைம்ஸ் இன்னொரு முறைகேட்டையும் வெளிபடுத்தி உள்ளது. அதாவது இன்றைக்கு நாட்டின் பல இடங்களில் மின்சார கட்டணம் உயர்ந்ததற்கு அதானி தான் காரணம் என பைனான்சியல் டைம்ஸ் ஆதாரத்தோடு கட்டுரை எழுதியுள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் வந்த சிஏஜி அறிக்கை.

இந்த அமைப்போட வேலை என்னன்னா….  மத்திய அரசு,  மாநில அரசு என்கின்ற செலவுகளை தணிக்கை செய்வது.  CAG ரிப்போர்ட் படி ஒன்பது வருஷத்துல  7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கே கிடையாது.  ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு எங்க போச்சுன்னு தெரியல ? ஆயுஷ்மான் பாரத் அப்படின்னு ஒரு திட்டம்.  அதுல  88 ஆயிரம் இறந்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு செஞ்சிருக்காங்க.

துவாரக் மாதா என்ற திட்டம். அதுல ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறதா ? இந்த CAG ரிப்போர்ட் சொல்லுது. இதையெல்லாம் தொடர்ந்து நம்முடைய தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வாய் திறக்க வழியில்லை. அது மட்டுமல்ல இந்த ஒன்பது ஆண்டுகள்ல 12 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்பரேட் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்கான ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி  என விமர்சனம் செய்துள்ளார்.