நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திமுக திட்டம் வகுத்திருக்கிறது. இந்த நிலையில் கட்டாயப்படுத்தி மாணவர்களிடமிருந்து கையெழுத்து பெறப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது சட்டவிரோதமானது எனவே  திமுக கையில் எடுத்துள்ள இந்த  கையெழுத்து இயக்கம் தொடர்பான முறையீட்டை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.  வழக்கறிஞர் எம்எல் ரவி.

மனுதாரர் மற்றவராக இருந்தாலும் வழக்கறிஞர் என்ற முறையில் முறையீடு செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி பரத சக்கரவர்த்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது.

திங்கட்கிழமை அன்று தலைமை நீதிபதி அமர்வில் வழக்கமான விசாரணையின் போது முறையீடு செய்யுங்கள் என்று அறிவித்திருக்கிறார்.எனவே இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வரவில்லை என்றாலும்,  திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கை முறையீடு செய்ய  வழக்கறிஞர் எம்எல் ரவி திட்டமிட்டு  இருக்கிறார்.