முன்னாள் மத்திய அமைச்சரும்,  தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான இருக்கக்கூடிய ஆ. ராசா உடைய தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. 2002 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரும் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது  15 அசையா சொத்துக்கள் பினாமி  பேரில் நிர்வகித்து வந்ததாக தெரிய வருகிறது.

குறிப்பாக சட்டவிரோத பண பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.  கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்பில் அவர் சொத்து சேர்த்ததாக   அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.