செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டடத்துற அமைச்சர்  ரகுபதி அவர்கள் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர். சட்டத்துறை அமைச்சர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பதற்கான வழக்கு தொடரபட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலே இருக்கின்றது.

ஊழல்தடுப்பு பிரிவு துறையை இவர்  கண்காணித்து வருகிறார். ஊழல் செய்கின்றவரின்  அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கின்ற போது, ரகுபதி அவர்கள் ஊழலை பற்றி பேசுவதற்கு அருகதையும் தகுதியும் கிடையாது. ஏன் என்று சொன்னால் ? ஊழல் சம்மந்தமாக இந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலே இருக்கின்ற பொழுது…

ஊழல் தடுப்புதுறை இவருக்கு ஒதுக்கபட்டது எந்த விதத்திலும் சரியாக  இருக்காது. இவர் ஊழலை  பற்றி பேசுகிறார். இவர் மேதகு ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார். இவரிடம் இந்த துறை இருப்பதே சரி அல்ல, இது தவறு..  ஊழல் குற்றச்சாட்டுபட்ட ஒருவரிடத்துலயே ஊழல்  தடுப்பு பிரிவு இருந்தா எப்படி சரியாக இருக்கும்? – என தெரிவித்தார்.