திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவருடைய தம்பி கவுஸ் ஆதம் பாஷா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கவுஷ் ஆதாம் பாஷா ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நேற்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் மஸ்தானின் மகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஸ்தானை கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளதாக தடவியல் துறை அறிக்கை அளித்துள்ளதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதேபோன்று வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கவுஷ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.