பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக தொடர்ந்து மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கின்றன.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருப்பதாக கூறுகின்றார்கள். அதுமட்டும் அல்லாமல் தேர்தலுக்கு இன்னும் 300 நாட்களே உள்ள நிலையில் பொது சிவில் சட்டத்திற்கான அவசரம் என்ன என்ற கேள்வி எழுப்பியதோடு தங்களுடைய எதிர்ப்பையும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.