நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் RuPay கிரெடிட் கார்டு மூலம் வணிகர்களுக்கு UPI  கட்டணங்களை வழங்கும் இந்தியாவின் முதலாவது பொதுத் துறை வங்கியாக கனரா வங்கி மாறியுள்ளது.

இந்தப் புதிய அம்சமானது வங்கியின் பிரபலமான  Canara ai1 என்ற ஒரு ஆப்பில் கிடைக்கிறது. இது கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் RuPay கடன் அட்டையினைப் பயன்படுத்தி அதன் மூலம் வணிகர்களுக்கு விரைவான மற்றும் தடையின்றிப் பணம் செலுத்த உதவுவதோடு அது அவர்களுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையையும் பெரும் வசதியையும் வழங்குகிறது.