இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருக்கும் பலகை ஒன்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது அதன்படி சாலையில் இருக்கும் நீல நிற பலகையில் சிவப்பு நிறத்தில் கிராஸ்மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம்.

அதனால் அந்த பகுதியில் வாகனத்தை மெதுவாக ஓட்டக்கூடாது எனவும் இடையே நிறுத்தக்கூடாது என்றும், ஒரு நொடி கூட நின்று யாரையும் பிக்கப் செய்யக்கூடாது என்றும் அர்த்தம். அந்த குறியீடு போட்டிருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. விபத்துகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதனால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.