நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நடந்த பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னூறு நாட்களே இருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தில் அவசரம் ஏன் என்று திமுக,  காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். தற்போதைய நிலையில் விவாதமே தேவையில்லை என ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கருத்து கூறியிருக்கின்றனர். பொது சிவில் சட்ட விகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுகின்றன எனவும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.