இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்குகள், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு வரும் நிலையில் 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது