தமிழகத்தில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை உள்ளது. பொதுவாகவே தீபாவளி என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் பட்டாசு தான். இந்த வருடம் தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் புத்தாடை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புத்தாடைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டு லிச்சி சாரீஸ், ஹோம் பிரே சாரீஸ், துவாரா சாரீஸ், அலியா சாரீஸ் , டு டவுன் கிளாஸ் சாரீஸ் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே குழந்தைகளுக்கு மிடி, கவுன், சுடிதார் லெக்கின், ஜீன்ஸ், காட்டன் டாப், பாப் லேகின்ஸ், மசக்கலி மற்றும் நியூ மாடல் பட்டியாலா போன்ற மாடல்கள் பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆண்களுக்கு கார்டன், ஜீன்ஸ் மற்றும் கார்கோ வெரைட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண் குழந்தைகளுக்கு பாபா சூட் வகைகள், கோர்ட் வெரைட்டி, லியோ சாட், குர்தா மற்றும் கார்கோ மாடல் வெரைட்டி ஆகியவை புதிரகங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன .

புள்ளிக்கோ விரும்பும் படி பளிச்சென்று அடிக்கும் பல வண்ணக் கலர்களின் ஷர்ட், பேண்ட் மற்றும் லோயர் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளது