தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்தல், பலகாரங்கள் செய்து சாமி கும்பிடுதல் என புதுப்புது கொண்டாட்டங்கள் இருக்கும். அதிலும் முக்கியமாக தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

ஏற்கனவே கார்த்தி நடித்த ஜப்பான் மற்றும் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு மற்றும் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனை தவிர்த்து மலையாள டப்பிங் படமான பாந்த்ரா திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.