உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தொலைக்காட்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்களின் சின்னமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, அரசியல், கிசுகிசு போன்றவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் ஊடகம்.

உலக தொலைக்காட்சி தினம் என்பது நவீன உலகில் தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்களை குறிக்கிறது. தொலைக்காட்சி சேனல் மற்றும் பொதுமக்களின் கருத்தை தெரிவிப்பதற்கான முக்கிய ஊடகமாகும். உலக அரசியலில் தொலைக்காட்சியின் தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது. கலாச்சார பன்முகத்தன்மை பொதுவான புரிதலை தொலைக்காட்சி ஊக்குவிக்கிறது.

ஜனநாயகம் மற்றும் தொலைக்காட்சிக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது. சமூக அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் தொலைக்காட்சியின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு மாநாடுகள் மற்றும் விரிவுரைகள் கூறுகிறது. சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்குவதில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.