உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக தொலைக்காட்சி தினம் என்பது தொலைக்காட்சியின் தாக்கத்தை தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதலுக்கான வழிமுறையாக அங்கீகரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். நமது கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதிலும், பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், ஜனநாயக விவாதத்தை ஊக்குவிப்பதிலும் ஊடகத்தின் பங்கு மிகவும் பெரிது.

பொதுவான கருத்தை மக்களுக்கு கொண்டு செல்லவும், முக்கியமான விஷயங்களை விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1996-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி உலக தொலைக்காட்சி தினத்தை அறிவித்தது. உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மீது ஊடகம் ஏற்படுத்திய குறிப்பிட்ட தாக்கத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவில் கடந்த 1959-ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டதிலிருந்து தொலைக்காட்சியானது ஒரு ஒற்றை அரசுக்கு சொந்தமான சேனலில் இருந்து எண்ணற்ற தனியார் சேனல்கள் பல்வேறு விருப்பு தேர்வுகளுடன் பல்வேறு துறையாக பரிணமித்தது. தொலைக்காட்சி என்பது பொழுதுபோக்கு இன்றியமையாத ஆதாரமாக இல்லாமல் கல்வி, சமூக பிரச்சனை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் பரவலான அணுகல், செல்வாக்கை கொண்டு குடிமக்களை மேம்படுத்துவதற்கு தவிர்க்க முடியாத கருவியாக செயல்படுகிறது.

சமூக வளர்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கு குறித்த கருத்தரங்குகள், குழு விவாதங்கள், ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை வல்லுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கையின் முக்கியத்துவம் பொறுப்பான உள்ளடக்க உருவாக்கம் பற்றிய விவாதங்களில் ஈடுபட இந்த நாள் உதவுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி உலக தொலைக்காட்சி தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொலைக்காட்சியின் திறன் பற்றி இந்த நாள் நினைவு கூறுகிறது.