உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள், கலை கலாச்சார நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாக பரிமாறிக் கொள்ள இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் முதல் தொலைக்காட்சி நாள் கொண்டாடப்பட்டது. கடந்த 1959-ஆம் ஆண்டு தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு இந்தியாவிற்கு தொலைக்காட்சி தொடங்குவதற்கு உதவியது. முதல் 30 வருடங்களில் தூர்தர்ஷன் மட்டுமே தேசிய ஒளிபரப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கலாச்சார பன்முகத்தன்மை பொதுவான புரிதலை தொலைக்காட்சி ஊக்குவிக்கிறது.

ஜனநாயகம் மற்றும் தொலைக்காட்சிக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது. சமூக அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் தொலைக்காட்சியின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு மாநாடுகள் மற்றும் விரிவுரைகள் கூறுகிறது. சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்குவதில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.