தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வெள்ள நிவாரண பணிக்கு 1.31 டன் பால் பொருட்கள், பிரட் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணத்தை தொடர முடியாமல் அந்த ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதன்பிறகு காலை ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தது.