அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவரைத் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி நெருக்கடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் என்றும், ஊழல் மலிந்துவிட்ட திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாடுவதற்குத் தயாராகிவிட்டனர் என்றும் விஜய் மிகவும் ஆக்ரோஷமாகத் தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.