லோகேஷ் கனகராஜ் விஜயின் 67-வது படத்தை இயக்கி வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, விஜய் 67-வது படத்தில் நடிப்பதற்கு சஞ்சய் தத் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
இந்த படத்தில் வில்லன் வேடத்திற்கு சஞ்சய் தத்தால் மட்டுமே சிறப்பான பர்பாமென்ஸ் கொடுக்க இயலும். அந்த அளவுக்கு அது ஒரு பவர்புல்லான கதாபாத்திரம் என கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. அங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சண்டை காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.