பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜி.பி முத்துவின் எதார்த்தமான குணம் மக்களை ரசிக்க வைத்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இன்றளவும் இதனை நினைத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சூப்பர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளியில் ஜி.பி முத்து தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் நடுவர்களான வெங்கடேஷ் பட், தாமுவுடன் ரக்சன், மணிமேகலை, சுனிதா மற்றும் ஜி.பி முத்து ஆகியோர் ஜாலியாக நடனம் ஆடுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.