அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய தலைவர்கள்.

நிச்சயமாக வெற்றி கோட்டை தொட்டு பிடிப்போம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் நிற்கவில்லை. அதனுடைய கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறது.

அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரண்டு காரணங்களை நாம் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளராக நின்று வென்று மறைந்திருக்கிற ஈவேரா திருமகன் அவருடைய தந்தையார் நிற்கின்றார்.  ஆகவே ஒருபக்கம் சிம்பத்தி.  இரண்டாவது சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸின் பின்னால் நின்று கொண்டு காங்கிரஸினுடைய வெற்றிக்காக பாடுபடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாக குற்றம் சாட்டுவதற்கு அந்த களம் பயன்படுமா என்று தெரியவில்லை. ஆகவே இந்த இரண்டு காரணங்கள் என தெரிவித்தார். திமுக கூட்டணியிடம் ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ என்ன இருந்தாலும் ஒரு தலைவர் ஜெயிப்போம் என்றுதொடர்ந்து தொண்டரிடம் சொன்னால் தான் அவர்கள் தேர்தல் களத்தில் உற்சாகமாக தேர்தல் பணி ஆற்றுவார்கள்.

ஆனால் வைகைச்செல்வன் பேச்சு அதிமுக ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளதாக கூறி, பலரும் அவரின் பேச்சுக்கு எதிராக கடுப்பில் இருப்பதாக சமூக வலைத்தள கருத்துக்கள் வட்டமடித்து வருகின்றன.