அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இரட்டை இலை சின்னம் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற சந்தேகம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் களத்தில் நிற்கிறோம். இரண்டாக பிரிந்து விட்டது, மூன்றாக பிரிந்துவிட்டது என்ற பிரசாரம் வேறு கொடிகட்டி பறந்தாலும் கூட,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளுடைய பேராதனை பெற்று இருக்கின்ற அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே நாங்கள் நிற்கிறோம். ஆகவே இவையெல்லாம் எவ்வளவு சிரமம் ? சிக்கல் அனைத்தும் இருக்கின்றது.

இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிர் தரப்பை காணவில்லை என கே.எஸ் அழகிரியின் பேச்சு மித மிஞ்சிய பேச்சாகத்தான் பார்க்க வேண்டும். அதிமுக உடைய எங்களுடைய முகமாக இருக்கும்கொங்கு மண்டலம் கூடுதல் பலம்.  ஆகவே  ஈரோடு கிழக்கு தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்… அப்படிப்பட்ட பங்களிப்போடு நாங்கள் இந்த தேர்தலில், எதிர்பார்ப்புகளோடு, நம்பிக்கைகளோடு, தன்னடக்கத்தோடு இந்த களத்தில் நிற்கிறோம் என தெரிவித்தார்.