அசோக் ராஜ் கோயல் என்ற இந்திய வ்லாகர் (Vlogger), பாகிஸ்தான் ரயிலின் தற்போதைய நிலையைத் தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள ரயிலின் மோசமான கட்டமைப்பு மற்றும் பராமரிப்பைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியாவின் சாதாரண பேசஞ்சர் ரயில்கள் கூட இதைவிட பல மடங்கு மேலானது” எனப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 20 வருடங்களுக்கு முன்பே இந்திய ரயில்கள் இதைவிட நவீனமாக இருந்தன என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரயில்வே அமைப்புகள் ஆரம்பத்தில் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா பாகிஸ்தானை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
பாகிஸ்தானின் மிக வேகமான ரயிலான ‘காரகோரம் எக்ஸ்பிரஸ்’ (Karakoram Express) மணிக்கு 105 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்கிறது. ஆனால், இந்தியாவின் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்கின்றன.
இந்தியா புல்லட் ரயில் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இன்னும் பழைய காலத்து ரயில்களையே நம்பிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு ரயில்வேயை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இந்த வீடியோ அப்பட்டமாகத் திரையிட்டுக் காட்டுகிறது.
