தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மித்ரன் ஜவகர்  இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ள இத்திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கில் அறிமுகமாக இருக்கின்றார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஆந்திராவில் நடந்தது. அப்போது பேசிய தனுஷ் தனக்கு தெலுங்கு தெரியாது. நான் தமிழில் பேசுகிறேன் என தெரிவித்தார். இதனால் தெலுங்கு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் தனுஷ். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுக்கு தமிழ் புரியவில்லை என தெரிவித்ததால் தனுஷ் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் தெலுங்கில் பேசாதது அங்கிருக்கும் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் தெலுங்கில் வாத்தி திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.