தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். இதனால் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கின்றார்.

சில நாட்களில் இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பின் நயன்தாரா அஜித்துக்கு போன் செய்து படத்தில் விக்னேஷ் சிவனை இணைத்துக் கொள்ளுங்கள் என கெஞ்சியதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.